மாவட்ட செய்திகள்

நாகை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு + "||" + Near Nagai Drowning in the pool The boy dies

நாகை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு

நாகை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு
நாகை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான்.
நாகப்பட்டினம்,

சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் வாஹித் ஹூசைன். இவருடைய மகன் அப்துல் சுக்கூர் (வயது 11). வாஹித் ஹூசைனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு நாகை பாப்பாக்கோவிலில் உள்ள தர்காவில் தங்கி, கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். தந்தையுடன் சிறுவன் அப்துல் சுக்கூர் தங்கி இருந்துள்ளான்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தர்கா அருகே உள்ள குளத்தில் தண்ணீர் எடுத்து வருவதற்காக அப்துல் சுக்கூர் சென்றபோது எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்து மூழ்கினான்.உடனே அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அப்துல் சுக்கூரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கள்ளக்குறிச்சி அருகே, கிணற்றில் பாய்ந்த குப்பை அள்ளும் வாகனம்; சிறுவன் பலி - தத்தளித்த தாய் மீட்பு
கள்ளக்குறிச்சி அருகே குப்பை அள்ளும் வாகனம் கிணற்றில் பாய்ந்தது. இதில் சிறுவன் பலியானான். தண்ணீரில் தத்தளித்த அவனது தாய் மீட்கப்பட்டார்.
2. பொள்ளாச்சி அருகே பரிதாபம், தனியார் பள்ளி வேன் மோதி சிறுவன் பலி - டிரைவர் கைது
பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளி வேன் மோதி சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதுதொடர்பாக வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
3. திருச்சி அரசு மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி
திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
4. கோவில்பட்டி அருகே பரிதாபம், மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி
கோவில்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
5. மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்: சிறுவன் பரிதாப சாவு
நெல்லை பேட்டையில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காயம் அடைந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.