மாவட்ட செய்திகள்

தொழிலாளியை மதுபாட்டிலால் தாக்கிய 2 பேர் கைது + "||" + Worker was hit by a bottle of alcohol 2 arrested

தொழிலாளியை மதுபாட்டிலால் தாக்கிய 2 பேர் கைது

தொழிலாளியை மதுபாட்டிலால் தாக்கிய 2 பேர் கைது
விருதுநகர் அருகே தொழிலாளியை மதுபாட்டிலால் தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்னர்.
விருதுநகர், 

விருதுநகர் அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்தவர் சோலை ராஜ்(வயது 48). தொழிலாளி. இவர் மத்தியசேனை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த சிவன்(21), கணேசன்(20), கருப்பசாமி ஆகியோர் வந்தனர். இவர்கள், சோலைராஜிடம் உன் மகனை கண்டித்து வை என எச்சரித்தனர். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும், மதுபாட்டிலால் சோலைராஜை தாக்கினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

இதுகுறித்து ஆமத்தூர் போலீசில் சோலைராஜ் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சிவன், கணேசன் ஆகியோரை கைது செய்தனர்.