மாவட்ட செய்திகள்

தாசில்தார் வீட்டில் 13 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு + "||" + Tehsildar House 13 pounds of jewelry, Rs.70 thousand thefts

தாசில்தார் வீட்டில் 13 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தாசில்தார் வீட்டில் 13 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தஞ்சையில் தாசில்தார் வீட்டில் 13 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர், 

தஞ்சை ரகுமான் நகரைச் சேர்ந்தவர் அருணகிரி (வயது42). இவர் தஞ்சை கலால் துறையில் தாசில்தாராக பணியாற்றி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு வரை தஞ்சை தாசில்தாராக பணியாற்றினார்.

இவர் நேற்று காலை 10 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரில் நடந்த ஒரு உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான சென்றார்.

பின்னர் மாலை 3.15 மணிக்கு வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றார்.

அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டார். மேலும், பின்புறக் கதவு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 13 பவுன் நகைகள், ரூ. 70,000 திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடிச்சென்றது தெரிய வந்தது. இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும், மோப்பநாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.