மாவட்ட செய்திகள்

6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் - வருவாய் அலுவலர் சாந்தி வெளியிட்டார் + "||" + Ballot list for 6 assembly constituencies - Revenue Officer issued

6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் - வருவாய் அலுவலர் சாந்தி வெளியிட்டார்

6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் - வருவாய் அலுவலர் சாந்தி வெளியிட்டார்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான விரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட சாந்தி வெளியிட்டார்.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமையில் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் நேற்று வெளியிட்டார்.


இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர்கள் குமரேசன்(ஓசூர்), தெய்வநாயகி (கிருஷ்ணகிரி), தாசில்தார்கள், நகராட்சி ஆணையாளர்கள், அரசியல் கட்சிகள் சார்பில் முனிராஜ் (பா.ஜனதா), பன்னீர்செல்வம் (காங்கிரஸ்), சந்திரமோகன் (தேசியவாத காங்கிரஸ்), ராமமூர்த்தி (தி.மு.க.), வஜ்ரவேல் (தே.மு.தி.க.) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி பேசியதாவது:-

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர் மற்றும் தளி ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடிகள் 100 சதவீதம் சரிபார்க்கும்பணி நடைபெற்று வருகிறது. 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மற்றும் 2 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பொதுமக்கள் நலன்கருதி வாக்களிக்க ஏதுவாக இரண்டாக பிரித்தும் மேலும் பழுதடைந்த வாக்குச்சாவடி வேறு கட்டிடத்திற்கு மாற்றியமைத்தும் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால் 7 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.