ராக்கிங் செய்த சட்டக்கல்லூரி மாணவர்கள் 5 பேர் இடைநீக்கம்
சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி விடுதியில் 2-ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் 5-ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி விடுதியில் 2-ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் 5-ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 2-ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களான அஜித் (வயது 19), வசந்த் (19), பூபதி (19) ஆகிய 3 பேரையும் 5-ஆம் ஆண்டு மாணவர்கள் ராக்கிங் செய்யும் போது தாக்கி இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கல்லூரி நிர்வாகம் ராக்கிங் செயலில் ஈடுபட்ட 5-ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவர்களான மாடசாமி (22), இளவரசன் (22), விஜய் (22), சூரிய பிரகாஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 5 மாணவர்களை நேற்று அதிரடியாக கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story