அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் விபத்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு ரூ.30 லட்சத்தில் ஜெனரேட்டர் ; டீன் திறந்து வைத்தார்
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட யு.பி.எஸ். மற்றும் ஜெனரேட்டரை டீன் செல்வி திறந்து வைத்தார்.
அடுக்கம்பாறை,
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு (தாய்) கடந்த ஜனவரி மாதம் முதல் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. விபத்தில் காயம் அடைந்தவர்கள், விஷம் குடித்தவர்கள், பூச்சிக்கடி, பக்கவாதம், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைக்கு இணையாக, அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த பிரிவில் தினமும் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், இந்த பிரிவை விரிவுப்படுத்தும் பணியில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் ஜெனரேட்டர் மற்றும் யு.பி.எஸ். அமைக்க, தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த பணிகள் முழுமையாக நிறைவுப்பெற்றதை தொடர்ந்து நேற்று ஜெனரேட்டர் மற்றும் யு.பி.எஸ். திறப்பு விழா நடந்தது. விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவின் தலைவர் ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜவேலு, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மருத்துவக்கல்லூரி டீன் செல்வி யு.பி.எஸ். மற்றும் ஜெனரேட்டரை திறந்து வைத்து பேசினார்.
விழாவில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story