தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வாகன சோதனையில் ரூ.18½ லட்சம் அபராதம்
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நடந்த வாகன சோதனையில் ரூ.18½ லட்சம் அபராதம் விதித்து வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். இது தொடர்பாக தஞ்சை துணை போக்குவரத்து ஆணையர் உதயகுமார் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர்,
சென்னை போக்குவரத்து ஆணையர் மற்றும் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக் கோட்டை மாவட்ட கலெக்டர் கள் அறிவுரைப்படி கடந்த மாதம் தஞ்சை போக்குவரத்து துணை ஆணையர் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டன. வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இந்த சோதனையை மேற் கொண்டனர்.
கடந்த மாதம் 8,679 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் 1,238 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. இதில் ரூ.18 லட்சத்து 42 ஆயிரத்து 800 அபராதமாக விதிக்கப்பட்டது. இவற்றில் உடனடியாக ரூ.11 லட்சத்து 15 ஆயிரத்து 570 வசூலிக்கப் பட்டது. தமிழ் நாட்டிற்கு முறையாக வரி கட்டாமல் இயக்கப்பட்ட சரக்கு வாகனங் கள், ஆம்னி பஸ்கள், பொக்லின் வாகனங்கள், கார் உரிமையாளர்களிடம் இருந்து சாலை வரியாக ரூ.9 லட்சத்து 76 ஆயிரத்து 841 வசூலிக்கப் பட்டது.
அதிக ஆட்களை ஏற்றி சென்ற 150 வாகனங்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாத 317 வாகனங்கள், காப்புச்சான்று இல்லாத 214 வாகனங்கள், கண் கூசும் முகப்பு விளக்கு பொருத்திய 83 வாகனங்கள், ஒளிரும் சிவப்பு பிரதிபலிப்பு நாடா இல்லாத 204 வாகனங்கள், தகுதி சான்று இல்லாத 119 வாகனங்களுக்கும் தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் பல்வேறு குற்றங்களுக்காக 152 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதிக வேகமாக வாகனங்களை ஓட்டி சென்ற 40 பேருக்கும், தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 87 பேருக்கும், செல்போனில் பேசியபடி வாகனங்கள் இயக்கிய 9 பேருக்கும், சீட்பெல்ட் அணியாமல் வாகனம் இயக்கிய 228 பேருக்கும், அதிகஎடை ஏற்றி சென்ற 123 பேருக்கும் தணிக்கை அறிக்கைகள் வழங்கி நடவடிக்கை எடுக்கப் பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story