கரூரில் கதவணை கட்டும் திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம்


கரூரில் கதவணை கட்டும் திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Sept 2019 3:30 AM IST (Updated: 14 Sept 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் கதவணை கட்டும் திட்டத்தை கைவிடக்கோரி கும்ப கோணத்தில் விவ சாயிகள் கருப்பு கொடியோந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்,

கரூர் காவிரியாற்றில் கட்டப்படவுள்ள புதிய கதவணை திட்டத்தை கைவிடக்கோரி தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கும்பகோணம் கோர்ட்டு ரவுண்டானா முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வேப்பத்தூர் வரதராஜன் தலைமை தாங்கினார். சாமிநாதன், விஸ்வநாதன், ஆதிகலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் சுவாமிமலை விமலநாதன் பேசினார்.

இந்த திட்டத்தினால் 14 மாவட்டங்களில் உள்ள 5.25 கோடி மக்களுக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படும். காவிரி டெல்டாவில் இதுவரை நடைபெற்று வந்த ஒரு போக சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். இந்த திட்டத்தினால் வருங்காலத்தில் காவிரி டெல்டா பாலை வனமாகி, குடிநீருக்கே ஆபத்து ஏற்படும். தமிழக அரசு கரூர் கதவணை திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story