மாவட்ட செய்திகள்

தாதர் ரெயில் நிலையத்தில்சுப்ரியா சுலே எம்.பி.க்கு தொல்லை கொடுத்த டாக்சி டிரைவர் கைது + "||" + Supriya Sule to MP Taxi driver arrested for harassment

தாதர் ரெயில் நிலையத்தில்சுப்ரியா சுலே எம்.பி.க்கு தொல்லை கொடுத்த டாக்சி டிரைவர் கைது

தாதர் ரெயில் நிலையத்தில்சுப்ரியா சுலே எம்.பி.க்கு தொல்லை கொடுத்த டாக்சி டிரைவர் கைது
தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி.க்கு மும்பை ரெயில் நிலையத்தில் தொல்லை கொடுத்த டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,

தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி.க்கு மும்பை ரெயில் நிலையத்தில் தொல்லை கொடுத்த டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

சுப்ரியா சுலேவுக்கு தொல்லை

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே. மராட்டிய மாநிலம் பாரமதி தொகுதி எம்.பி.யான இவர் சம்பவத்தன்று தேவகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மும்பை தாதர் வந்தார். அப்போது டிரைவர் ஒருவர் ரெயில் பெட்டியில் ஏறி சுப்ரியா சுலே மற்றும் பயணிகளை தனது டாக்சியில் சவாரிக்கு வருமாறு அழைத்தார். சுப்ரியா சுலே டாக்சி தேவையில்லை என கூறினார்.

எனினும் அவர் டாக்சியில் வருமாறு சுப்ரியா சுலேவை கட்டாயப்படுத்தினார். மேலும் அங்கு இருந்து அவரை செல்லவிடாமல் வழிமறித்து உள்ளார். இதுகுறித்து சுப்ரியா சுலே அவருக்கு தொல்லை கொடுத்த டாக்சி டிரைவரின் பெயரை குறிப்பிட்டு ரெயில்வே போலீசுக்கு டுவிட்டரில் புகார் அளித்தார்.

டாக்சி டிரைவர் கைது

இந்த புகாரை அடுத்து ரெயில்வே போலீசார் ரெயிலில் வந்த சுப்ரியா சுலேவுக்கு தொல்லை கொடுத்த டாக்சி டிரைவர் குல்ஜித் சிங் மல்கோத்ராவை (வயது42) கைது செய்தனர்.

இதுகுறித்து மத்திய ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதர் கூறும்போது, ‘‘குல்ஜித் சிங் மல்கோத்ராவுக்கு டிக்கெட் இன்றி ரெயிலில் ஏறியதற்காக ரூ.260 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாட்டுங்கா போக்குவரத்து போலீசார் சீருடை, ஒட்டுநர் உரிமம் இன்றி டாக்சி ஓட்டியதற்காக அவருக்கு ரூ.600 அபராதம் விதித்து உள்ளனர். மேலும் தாதர் ரெயில்வே போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குல்ஜித் சிங் மல்கோத்ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்’’ என்றார்.

டுவிட்டரில் அளித்த புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த ரெயில்வே போலீசாருக்கு சுப்ரியா சுலே எம்.பி. நன்றி கூறியுள்ளார்.