வாலிபரை கல்லால் அடித்து கொன்ற போலீஸ்காரர் மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
வாலிபரை கல்லால் அடித்து கொலை செய்த போலீஸ்காரர் மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மும்பை,
வாலிபரை கல்லால் அடித்து கொலை செய்த போலீஸ்காரர் மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கல்லால் அடித்து கொலை
மும்பை மலாடு பதான்வாடி பகுதியை சேர்ந்தவர் அப்சல் பெக் (வயது22). இவரது நண்பர் சிவானந்த். இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் மகன் அமோல் குகே (25), ஜெயபால், அவினாஷ் (26) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி அப்சல் பெக் சிவானந்துடன் மலாடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே அமோல் குகே மற்றும் அவரது நண்பர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது வழிவிடுவது தொடர்பாக 2 தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் அமோல் குகே மற்றும் அவரது கும்பலை சேர்ந்தவர்கள் அப்சல் பெக்கை கல் மற்றும் டியூப் லைட்டால் சரமாரியாக அடித்தனர். இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆயுள் தண்டனை
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அமோல் குகே, ஜெயபால், அவினாஷ் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.
இதில் வழக்கை விசாரித்த நீதிபதி கே.எஸ்.கோரே, வாலிபரை அடித்து கொலை செய்த போலீஸ்காரர் மகன் அமோல் குகே, ஜெயபால், அவினாஷ் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார். மேலும் போதிய ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி மற்ற 5 பேரையும் அவர் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story