சட்டசபை தேர்தலில் சிவசேனாவுக்கு 106 தொகுதிகளை ஒதுக்க பா.ஜனதா தயார்
சட்டசபை தேர்தலில் சிவசேனாவுக்கு 106 தொகுதிகளை ஒதுக்க பா.ஜனதா தயாராக இருப்பதாக தகவல் கள் வெளியாகி உள் ளன.
மும்பை,
சட்டசபை தேர்தலில் சிவசேனாவுக்கு 106 தொகுதிகளை ஒதுக்க பா.ஜனதா தயாராக இருப்பதாக தகவல் கள் வெளியாகி உள் ளன.
தொகுதி பங்கீடு
மராட்டிய சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா - சிவசேனா கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இந்த பேச்சு வார்த்தையின் போது சிவசேனாவுக்கு 106 தொகுதிகளை பா.ஜனதா ஒதுக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் சிவசேனா 120 தொகுதிகளுக்கு மேல் வேண்டும் என கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பா.ஜனதாவை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில் ‘‘நாங் கள் சிவசேனாவுக்கு 106 தொகுதிகளை ஒதுக்க தயாராக உள்ளோம். எனினும் சிவசேனா குறைந்தபட்சம் 120 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவிப்பார்கள். 2 கட்சி இடையேயான தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை ஓரிரு நாட்களில் முடியும்’’ என்று கூறினார்.
கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் தனித்து போட்டியிட்டன. இதில் பா.ஜனதா 122 தொகுதியிலும், சிவசேனா 63 தொகுதியிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
சிறிய கட்சிகள்..
இதேபோல பா.ஜனதா கூட்டணியில் உள்ள ஜன் சுராஜ்ய சக்தி கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேற்கு மராட்டியத்தில் செல்வாக்கு மிக்க ஜன் சுராஜ்ய கட்சி 9 தொகுதிகள் கேட்டதாகவும் ஆனால் பா.ஜனதா அவர்களுக்கு 4 தொகுதிகளை ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சி, சிவசங்காரம், ராஷ்ட்டிரிய சமாஜ் கட்சி ஆகிய கட்சிகளுடனும் பா.ஜனதா தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story