விருதுநகருக்கான கூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுவது எப்போது? 2 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை
விருதுநகர் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் கூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என 2 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லாத நிலையே நீடிக்கிறது.
விருதுநகர்,
மாவட்ட தலைநகரான விருதுநகரில் நகராட்சி நிர்வாகம் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. நகரின் குடிநீர் தேவையானது, நிலத்தடி நீர் ஆதாரத்தில் இருந்தும், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்தும் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆனால் நிலத்தடி நீர் ஆதாரங்கள் வறண்டு விட்டதாலும், வல்லநாட்டில் இருந்து வரும் தாமிரபரணி தண்ணீர் 40 சதவீதமே கிடைத்து வருவதாலும் நகரில் குடிநீர் பிரச்சினை கடுமையாகி வருகிறது.
இதனால் சில பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீராக இல்லை என பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடும் நிலையும் தொடங்கி உள்ளது.
விருதுநகருக்கான நிலத்தடி நீர் ஆதாரங்கள் அடிக்கடி வறண்டு விடும் நிலை உள்ளதால் இந்நகருக்கு கூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து விருது நகருக்கான கூடுதல் குடிநீர் திட்டம் சீவலப்பேரியில் இருந்து தாமிரபரணி தண்ணீர் கொண்டு வருவதன் மூலம் நிறைவேற்றப்படும் என 2 ஆண்டுகளுக்கு முன்னர் சிவகாசியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு விரைவில் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் உறுதி அளித்தார்.
இந்தநிலையில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகம் விருதுநகருக்கான கூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கான மதிப்பீடு தயாரித்து வருவதாக இம்மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் ஆகியோரிடம் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் கடந்த ஆண்டு தெரிவித்தார்.
ஆனாலும் இத்திட்டத்திற்கான மதிப்பீடு தயாரிப்பு எந்த நிலையில் உள்ளது? திட்டப்பணிகள் எப்போது தொடங்கப்படும்? என்பது பற்றிய தகவல் ஏதும் குடிநீர் வடிகால் வாரியத்தால் தெரிவிக்கப்படவில்லை. முதல்-அமைச்சர் அறிவித்து 2 ஆண்டுகள் ஆகியும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இத்திட்டப்பணியை தொடங்க நடவடிக்கை ஏதும் எடுக்காதது ஏன் என்றும் தெரியவில்லை.
விருதுநகரை பொறுத்தமட்டில் ஒவ்வொரு ஆண்டும் வறட்சி பாதிப்பால் நிலத்தடி நீர் ஆதாரங்கள் வறண்டு விடும் நிலையில் நகராட்சி நிர்வாகம் நகர் மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் திணறும் நிலை உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய வந்த நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனிடம், விருதுநகரில் தினசரி 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகத்தால் தரப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நடைமுறையில் 15 தினங்கள் முதல் 18 தினங்கள் இடைவெளியில் தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
எனவே நகரில் குடிநீர் தேவையை சமாளிக்க கூடுதல் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டியது அத்தியாவசிய தேவை ஆகும்.
எனவே குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகம் முதல்-அமைச்சர் அறிவித்தப்படி விருதுநகருக்கான கூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். மாவட்ட நிர்வாகமும், விருதுநகர் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனும் இதுகுறித்து உள்ளாட்சித்துறை அமைச்சரிடமும், குடிநீர் வடிகால் வாரியத்திடமும் வலியுறுத்தி, திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
திட்டம் தாமதமாகும் பட்சத்தில் விருதுநகரில் நகராட்சி நிர்வாகத்தால் எதிர் வரும் காலங்களில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

Related Tags :
Next Story