காரியாபட்டி அருகே ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு; தாலுகா அலுவலகம் முற்றுகை


காரியாபட்டி அருகே ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு; தாலுகா அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 15 Sept 2019 4:00 AM IST (Updated: 14 Sept 2019 11:37 PM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி அருகே ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே கரிசல்குளத்தில் பேரிடர் நிவாரண நிதி திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு காரியாபட்டி பகுதிக்கு தண்ணீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் தங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது என்று கரிசல்குளம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கிராம மக்கள் காரியாபட்டி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் சமரச கூட்டம் நடைபெற்றது, அப்போது தாசில்தார் ராம்சுந்தர், பேரூராட்சி செயல் அலுவலர் மோகன் கென்னடி ஆகியோர் சம்பந்தப்பட்ட கிராம மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story