மாவட்ட செய்திகள்

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுவில் தீர்மானம் + "||" + General Elections for Grades 5 and 8 Notification should be withdrawn by the Teachers Alliance State Executive Committee

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுவில் தீர்மானம்

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுவில் தீர்மானம்
5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி,

தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி ஜங்‌‌ஷன் பகுதியில் ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் நம்பிராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுசெயலாளர் வின்சென்ட் பால்ராஜ் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-


புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், பொய் வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். ஒருங்கிணைப்பாளர்களை முதல்-அமைச்சர் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

உண்ணாவிரத போராட்டம்

இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதம் உள்பட அனைத்து ஆசிரியர், பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து 21 மாத ஊதிய நிலுவை தொகையினை வழங்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24-ந் தேதி நடத்த உள்ள உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியினர் திரளாக பங்கேற்பது.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மேலும் 5, 8-ம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பும், கண்டனத்தையும் தெரிவித்தும், இந்த உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வினால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். கூட்டத்தில் அகில இந்திய செயலாளர் அண்ணாமலை, மாநில பொருளாளர் சந்திரசேகர், துணை பொது செயலாளர் முனியாண்டி, திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தோணி எட்வர்ட் ராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பல பொருட்கள் உற்பத்திக்கு அனுமதி அளித்துள்ளதால் தொழில்கள் வளர்ச்சி அடையும்
சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பல பொருட்கள் உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதன் மூலம் தொழில்கள் வளர்ச்சி அடையும் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
2. டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்: குடையுடன் வரிசையில் நின்று மதுபானம் வாங்கினர்
புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. குடையுடன் வரிசையில் நின்று மதுப்பிரியர்கள் மதுபானம் வாங்கினர்.
3. ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் ராணுவத்தினருக்கான கேண்டீனில் காணாமல் போன சமூக இடைவெளி
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கான கேண்டீனில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் கூட்டமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. அனைத்து கடைகள், நிறுவனங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை
தற்போது திறக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள், நிறுவனங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரி மஞ்சுநாதா கூறினார்.
5. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமையில் நடைபெற்றது
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்றது.