தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் ஞானதிரவியம் எம்.பி. பங்கேற்பு
நெல்லை கிழக்கு மாவட்டம் ராதாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட திசையன்விளையில் வி.எஸ்.ஆர். மால் முன்பு தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது.
நெல்லை,
நெல்லை கிழக்கு மாவட்டம் ராதாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட திசையன்விளையில் வி.எஸ்.ஆர். மால் முன்பு தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. ஞானதிரவியம் எம்.பி. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு முன்னிலை வகித்தார்.
முகாமில் 410 இளைஞர்கள் புதிய உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர். ராதாபுரம் ஒன்றிய கழகம் சார்பில் 15 ஆயிரம் புதிய இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்த்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் பெல்சி மற்றும் ஊராட்சி செயலாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாடுகளை ராதாபுரம் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் செய்திருந்தார்.
Related Tags :
Next Story