வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் புதிய ரக நெல் அறிமுகம் ; ஹெக்டேருக்கு 5.8 டன் மகசூல் கிடைக்கும்
ஹெக்டேருக்கு 5.8 டன் மகசூல் கிடைக்கும் வகையில் ‘வி.ஜி.டி.-1’ என்ற புதிய ரக நெல் வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
தேனி,
தேனி மாவட்டம், வைகை அணை அருகில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இங்கு நெல் ரகங்கள் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகின்றன. விதைகள் உற்பத்தி செய்யப்படுவதுடன், புதிய நெல் ரகங்கள் கண்டுபிடிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வகையில் இந்த ஆராய்ச்சி நிலையத்தில் இந்த ஆண்டு புதிய ரக நெல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நெல் ரகத்துக்கு ‘வி.ஜி.டி.-1’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
இந்த வி.ஜி.டி.-1 ரகம், 125 முதல் 130 நாட்களில் மகசூல் கொடுக்கும். பல்வேறு சோதனை முயற்சிகளை கடந்து வெற்றிகரமாக இந்த புதிய ரக நெல் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இதன் அரிசி சிறிய அளவில் மாப்பிள்ளை சம்பா அரிசி போன்றே இருக்கும். இது பிரியாணி செய்வதற்கு ஏற்றதாக இருக்கும். ஒரு ஹெக்டேருக்கு 5.8 டன் மகசூல் கிடைக்கும். இந்த புதிய ரக நெல் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு தற்போது வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள மண்ணுக்கு ஏற்ற ரகமாக இது இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story