மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி, ஓசூரில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் + "||" + The Jakdo-Geo Confederacy Demonstration

கிருஷ்ணகிரி, ஓசூரில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, ஓசூரில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி, ஓசூரில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில், புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர், ஆசிரியர், சமூக நீதிக்கு எதிரான தேசிய புதிய கல்விக்கொள்கை 2019-ஐ முற்றிலுமாக ரத்து செய்திட வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள 17 பி ஒழுங்கு நடவடிக்கைகள், பணி மாறுதல் ரத்து செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தொடங்கி வைத்தார். ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்கள் தியோடர் ராபின்சன் மற்றும் நடராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, நிதி காப்பாளர் நாராயணன் ஆகியோர் தலைமையில் இந்த ஊர்வலம் டி.பி.லிங்க் ரோடு வந்தடைந்தது. பின்னர் பழையபேட்டை காந்தி சிலை அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில், நந்தகுமார் நன்றி கூறினார்.

ஓசூரில், ஜாக்டோ-ஜியோ அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகி ல்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஆசிரியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொன்.நாகேஷ் தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர் சங்க முன்னாள் நிர்வாகி சந்திரசேகர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவராஜ், மாவட்ட நிர்வாகிகள் ஜெயலட்சுமி, ஜெகதாம்பிகா, ஆறுமுகம், வட்ட செயலாளர் திம்மராஜ், பொருளாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தின்போது, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக்கொள்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. கடலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கடலூர் அண்ணா பாலம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலை கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி அருகே கீழ்நாரியப்பனூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
3. இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சேலம் டவுன் ரெயில் நிலையம் அருகே நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கினார்.
4. இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.