கும்பகோணத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தபேனர்கள் அகற்றம் போலீசார் நடவடிக்கை


கும்பகோணத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தபேனர்கள் அகற்றம் போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 14 Sep 2019 10:45 PM GMT (Updated: 14 Sep 2019 9:03 PM GMT)

கும்பகோணம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீசார் அகற்றினர்.

கும்பகோணம்,

கும்பகோணம் பகுதியில் விளம்பர பேனர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து கும்பகோணம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த பேனரை அகற்றி னர். இதுதொடர்பாக மல்லுக தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 53) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பேனர்கள் அகற்றப்பட்டன. தாராசுரம் திருக்களம் மேல்கரை அருகே அனுமதியின்றி பேனர் வைத்ததாக விக்கி, பிரகாஷ், முத்தரசன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story