பிறந்தநாளையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவிப்பு அமைச்சர் பங்கேற்பு
பிறந்தநாளையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.
கரூர்,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க.வினர் கரூர் வெங்கமேட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். கீதா எம்.எல்.ஏ., திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது திராவிட இயக்கத்தின் அஸ்திவாரமான அண்ணாவின் புகழ் ஓங்குக... என வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து அருகிலிருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கு அ.தி.மு.க. கொடியினை அமைச்சர் ஏற்றி வைத்தார்.
இனிப்புகள் வழங்கினர்
அப்போது பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அ.தி.மு.க.வினர், அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில், மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, நகர செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், வக்கீல் பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் என்ஜினீயர் கமலக்கண்ணன், எம்.எஸ்.மணி, தொழிற்சங்க செயலாளர் பொரணி கணேசன், மாநில அமைப்புசாரா தொழிலாளர் சங்க செயலாளர் ராயனூர் சாமிநாதன், முன்னாள் மாணவரணி செயலாளர் தானேஷ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.வி.செந்தில்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story