காஷ்மீரில் சிதம்பரத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் சாவு


காஷ்மீரில் சிதம்பரத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் சாவு
x
தினத்தந்தி 16 Sept 2019 5:00 AM IST (Updated: 15 Sept 2019 10:49 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் சிதம்பரத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் மயங்கி விழுந்து இறந்தார். அவரது உடல் இன்று விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.

சிதம்பரம்,

சிதம்பரம் ஓமகுளத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது 51). இவர் காஷ்மீர் ஸ்ரீநகரில் துணை ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் சக வீரர்களுடன் வாகனத்தில் அப்பகுதியில் ரோந்து சென்றார். இந்நிலையில் நேற்று அதிகாலை வாகனத்தில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவலை துணை ராணுவத்தினர் ஆரோக்கியதாசின் உறவினர் ஜான்மில்டனுக்கு செல்போன் மூலம் தெரிவித்தனர்.

இதை கேள்விப்பட்டதும் அவர் மற்றும் ஆரோக்கியதாசின் மனைவி ஆரோக்கியலட்சுமி, மகன் ஆகாஷ், மகள் சுபிக்‌ஷா மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரது பிரிவை நினைத்து அவர்கள் கதறி அழுதனர். இதையடுத்து இறந்த ஆரோக்கியதாசின் உடல் விமானம் மூலம் இன்று (திங்கட்கிழமை) அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

Next Story