2022-ம் ஆண்டுக்குள் 1½ லட்சம் சுகாதார நல மையங்கள் மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தகவல்


2022-ம் ஆண்டுக்குள் 1½ லட்சம் சுகாதார நல மையங்கள் மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தகவல்
x
தினத்தந்தி 16 Sept 2019 3:30 AM IST (Updated: 16 Sept 2019 12:04 AM IST)
t-max-icont-min-icon

2022-ம் ஆண்டுக்குள் 1½ லட்சம் சுகாதார மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் கூறினார்.

பெங்களூரு, 

2022-ம் ஆண்டுக்குள் 1½ லட்சம் சுகாதார மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் கூறினார்.

சுகாதார நல மையங்கள்

மத்திய அரசின் ‘ஆயுஸ்மான் பாரத்‘ திட்டத்தின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் தொடக்க விழா கோலாரில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் கலந்து கொண்டு, ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

பிரதமர் மோடி, 132 கோடி மக்கள் சுகாதாரமாக வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். 2022-ம் ஆண்டுக்குள் இதற்காக 1½ லட்சம் சுகாதார நல மையங்கள் தொடங்கப் படும். இதில் 21 ஆயிரம் மையங்கள் ஏற்கனவே பல மாநிலங்களில் தொடங்கப்பட்டுவிட்டன. அடுத்த ஆண்டு (2020) மார்ச் மாதத்திற்குள் மேலும் 40 ஆயிரம் மையங்கள் திறக்கப்படும்.

மருத்துவ காப்பீட்டு திட்டம்

‘ஆயுஸ்மான் பாரத்‘ மருத்துவ காப்பீட்டு திட்டத்தை இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் பாராட்டுகிறார்கள். இது நாட்டுக்கு பெருமை அளிக்கும் விஷயம். ஒரே மாதிரியான மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.

இவ்வாறு ஹர்ஷவர்தன் பேசினார்.

Next Story