பெற்றோர்களுடன் வரும் குழந்தைகளுக்காக எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீஸ் நிலையத்தில் விளையாட்டு கூடம் அமைப்பு
பெற்றோர்களுடன் வரும் குழந்தைகள், சிறுவர்-சிறுமிகளுக்காக பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீஸ் நிலையத்தில் விளையாட்டு கூடம் அமைக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
பெற்றோர்களுடன் வரும் குழந்தைகள், சிறுவர்-சிறுமிகளுக்காக பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீஸ் நிலையத்தில் விளையாட்டு கூடம் அமைக்கப்பட்டு உள்ளது.
புதிய திட்டம்
பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு தேடி ஏராளமானவர்கள் போலீஸ் நிலையத்துக்கு செல்கிறார்கள். இவ்வாறு செல்லும் பலர் தங்களின் குழந்தைகளை அழைத்து செல்கிறார்கள். குழந்தைகள் தங்களுடன் இருப்பதால் போலீஸ் நிலையத்தில் உள்ள அதிகாரி களிடம் புகார் அல்லது விசாரணை தொடர்பான முழு விவரங்களையும் சம்பந்தப்பட்டவர்கள் கூற முடியாத நிலையும் உருவாகிறது.
இதை தடுக்க பெங்களூரு மாநகர போலீசார் புதிய திட்டம் ஒன்றை வகுத்தனர். அதன்படி போலீஸ் நிலையங்களில் குழந்தைகள், சிறுவர்கள் விளையாடுவதற்காக விளையாட்டு கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
விளையாட்டு கூடம்
இந்த நிலையில் பெங்களூருவில் முதல் முதலாக எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. ‘குழந்தைகளுக்கான வீடு‘ என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு கூடத்தை தென்கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ஈஷா பண்ட் திறந்து வைத்தார்.
இந்த கூடத்தில் பலூன்கள் நிரப்பப்பட்டு உள்ளன. சறுக்கு உபகரணம் உள்பட பல்வேறு விளையாட்டு பொருட்கள் உள்ளன. மேலும் அந்த கூடத்தின் சுவரில் குழந்தைகளை ஈர்க்கும் வகையில் ‘கார்ட்டூன்‘ கதாபாத்திரங்கள், வனவிலங்குகளின் உருவங்கள் வரையப்பட்டு உள்ளன. திறப்பு விழாவையொட்டி விளையாட்டு கூடத்தில் பள்ளி ஒன்றின் மாணவ-மாணவிகள் விளையாட அனுமதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story