மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கம் + "||" + Anna Medal for Police Officers

போலீஸ் அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கம்

போலீஸ் அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கம்
மாவட்டத்தில் பணியாற்றும் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு இந்த ஆண்டிற்கான அண்ணா பதக்கம் கிடைத்துள்ளது.
சிவகங்கை,

ஆண்டு தோறும் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த தினத்தையொட்டி போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்குதமிழக அரசின் சார்பில் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது மாவட்டத்தில் பணிபுரியும் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.


அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிபவர் மங்களேஸ்வரன். இவருக்கு இந்த ஆண்டு அண்ணா பதக்கம் கிடைத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையை சேர்ந்த இவர், தஞ்சாவூர், நெல்லை மாவட்டத்திலும் பணிபுரிந்துள்ளார். தற்போது சிவகங்கையில் தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிகிறார்.

இதேபோல மாவட்ட குற்றபிரிவு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரியும் இளங்கோவிற்கும் இந்த ஆண்டுக்கான அண்ணா பதக்கம் கிடைத்துள்ளது.

பதக்கம் பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் உள்பட போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை