குத்தாட்டம் போட்டதாக சமூகவலைதளத்தில் பரவிய காட்சி; தனவேலு எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் சாலை மறியல்
குத்தாட்டம் போட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ காட்சி பரவியதால் தனவேலு எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாகூர்,
வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து அரசியல் கட்சி பிரமுகர்போல் ஒருவர் வாலிபர் ஒருவருடன் சேர்ந்து சினிமா பாட்டுக்கு குத்தாட்டம் போடுவது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோ காட்சிக்கு இடையே பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலு நடனமாடினார் என வாசகம் இடம்பெற்றது.
இதைப்பார்த்து தனவேலு எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலைதளத்தில் பதிவிட்டனர்.
இந்த நிலையில் தனவேலு எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் கடலூர்- புதுச்சேரி ரோடு கன்னியக்கோவில் 4 முனை சந்திப்பில் நேற்று பிற்பகல் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், பாகூர் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி மற்றும் போலீசார் அங்கு வந்தனர்.
சமூகவலைதளத்தில் பரவிய குத்தாட்ட காட்சியில் தனவேலு எம்.எல்.ஏ.வின் பெயரை குறிப்பிட்டவர்கள் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உறுதி அளித்ததின்பேரில் மறியலை கைவிட்டனர்.
இதுகுறித்து கன்னியக்கோவில் பகுதியை சேர்ந்த ராஜா கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் 2 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story