வீடுகள், தனியார் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டாயம் அமைக்க வேண்டும் - கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்


வீடுகள், தனியார் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டாயம் அமைக்க வேண்டும் - கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Sept 2019 4:45 AM IST (Updated: 16 Sept 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வீடுகள், தனியார் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டாயம் அமைக்க வேண்டும் என கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி தி இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினீயர்ஸ் (இந்தியா) சார்பில் என்ஜினீயர்ஸ் தினவிழா செண்பகா ஓட்டலில் நேற்று நடந்தது. விழாவுக்கு புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி மற்றும் புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியின் முதல்வர் கோதண்டராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். விழாவில் தி இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினீயர்ஸ் அமைப்பின் தலைவர் குணராஜா, கவர்னர் கிரண்பெடிக்கு விருது வழங்கினார்.

இதில் கவர்னர் கிரண்பெடி பேசியதாவது:-

நான் எனது பணியை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து வருகிறேன். நான் யாருக்கும் சாதகமாகவோ, பாதகமாகவோ நடந்து கொள்ளவில்லை. புதுச்சேரியை பசுமையாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறேன். நீர் ஆதாரத்தை சேமிக்க வேண்டும். புதுவை அரசிடமிருந்து நிதியை பெறாமல் தனியார் பங்களிப்புடன் ஏராளமான ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. இதில் எவ்வித கமிஷனும் பெறவில்லை. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வீடுகள், கல்லூரிகள், தனியார் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் கட்டாயம் அமைக்க வேண்டும்.

மக்கள் பணம் மக்களையே சென்றடைய வேண்டும். அரிசிக்கு பதிலாக பணம் வழங்குவதால் மக்கள் தரமான அரிசியை வாங்கிக் கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தலைவர் சரவணன் வரவேற்றார். இதில் புதுச்சேரியை சேர்ந்த என்ஜினீயர்ஸ் பலர் கலந்துகொண்டனர். முடிவில் கவுரவ செயலாளர் ராஜாராம் நன்றி கூறினார்.

Next Story