பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு


பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 16 Sept 2019 4:00 AM IST (Updated: 16 Sept 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் அண்ணா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதேபோல் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற மாலை அணிவிப்பு நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமை தாங்கினார். பின்னர் அவரும், கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. அசோகனும் ஒன்றாக சேர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் ராஜன், தோவாளை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், நகர செயலாளர் சந்துரு, ஜெயசீலன், லதா ராமசந்திரன், நாஞ்சில் சந்திரன், பூங்கா கண்ணன், வேலாயுதம் உள் பட பலர் கலந்து கொண்ட னர்.

தி.மு.க.-அ.ம.மு.க.

இதே போல தி.மு.க. சார்பிலும் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் நகர செயலாளர் மகேஷ் தலைமை தாங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவைத்தலைவர் ஜோசப்ராஜ், வக்கீல் உதயகுமார், சாகுல் அமீது உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் அ.ம.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் பச்சைமால் தலைமை தாங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். லட்சுமணன் உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். திராவிடர் கழகம் சார்பில் அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் மணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தென்மண்டல செயலாளர் வெற்றிவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

சி.என்.ராஜதுரை

இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் சி.என்.ராஜதுரை அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Next Story