கோவில்பட்டி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைவு
கோவில்பட்டி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்து உள்ளது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்து உள்ளது.
விலை குறைவு
கோவில்பட்டி மார்க்கெட்டுக்கு மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம், கயத்தாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாட்களாக கோவில்பட்டி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்ததால், விலை குறைந்து உள்ளது.
கோவில்பட்டி மார்க்கெட்டில் கடந்த வாரம் ரூ.50-க்கு விற்ற ஒரு கிலோ கத்தரிக்காய் தற்போது ரூ.30 ஆக விலை குறைந்தது. அதேபோன்று கடந்த வாரம் ரூ.80-க்கு விற்ற ஒரு கிலோ பீன்ஸ் தற்போது ரூ.40 ஆகவும், ரூ.40-க்கு விற்ற ஒரு கிலோ கேரட் தற்போது ரூ.30 ஆகவும், ரூ.30-க்கு விற்ற வெண்டைக்காய் தற்போது ரூ.20 ஆகவும், ரூ.40-க்கு விற்ற அவரைக்காய் தற்போது ரூ.30 ஆகவும், ரூ.40-க்கு விற்ற கோவங்காய் தற்போது ரூ.30 ஆகவும் விலை குறைந்தது.
அதேபோன்று கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.20-க்கு விற்ற சீனி அவரைக்காய் தற்போது ரூ.25 ஆகவும், ரூ.30-க்கு விற்ற சேனைக்கிழங்கு தற்போது ரூ.40 ஆகவும், ரூ.30-க்கு விற்ற பல்லாரி தற்போது ரூ.40 ஆகவும் விலை உயர்ந்தது.
விலை விவரம்
கோவில்பட்டி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை விவரம் (கிலோவில்) வருமாறு:- கத்தரிக்காய்-ரூ.30, சீனி அவரைக்காய்-ரூ.25, பீன்ஸ்-ரூ.40, கேரட்-ரூ.30, பாகற்காய் (நாடு)-ரூ.80, வெண்டைக் காய்-ரூ.20, கோவங்காய்- ரூ.30, சேனைக்கிழங்கு-ரூ.40, பீட்ரூட்-ரூ.30, சவ்சவ்-ரூ.30, முள்ளங்கி-ரூ.20, முட்டைகோஸ்- ரூ.30, புடலங்காய்- ரூ.30, வெங்காயம்-ரூ.50, பல்லாரி- ரூ.40, மிளகாய்-ரூ.30, உருளைக்கிழங்கு (ஆந்திரா)-ரூ.20, உருளைக்கிழங்கு (முதல்தரம்)-ரூ.35, முருங்கைகாய்- ரூ.40, அவரைக் காய்-ரூ.30.
இந்த தகவலை கோவில்பட்டி தினசரி மார்க்கெட் மொத்த வியாபாரி காமராஜ் தெரிவித்தார்.
Related Tags :
Next Story