பிறந்தநாள் விழா: அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


பிறந்தநாள் விழா: அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 16 Sept 2019 3:30 AM IST (Updated: 16 Sept 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பிறந்தநாள் விழா

தூத்துக்குடி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா 111-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அண்ணா உருவச்சிலை, அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா உருவச்சிலைக்கு தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயலாளர் அரசகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அ.தி.மு.க.வினர் அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

தி.மு.க.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காய்கறி மார்க்கெட் அருகே உள்ள அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகம்

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பெரியாரடியான் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

எம்.ஜி.ஆர். கழகம்

தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் அழகிரிசாமி, தலைவர் பால்பாண்டி ஆகியோர் அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில பலர் கலந்து கொண்டனர்.

Next Story