பிறந்த நாள் விழா: அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை,
அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அண்ணா பிறந்தநாள்
பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழா களக்காட்டில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு அமைந்துள்ள அவரது முழுஉருவ சிலைக்கு நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் ஜெயலலிதா பேரவை செயலாளர் இ.நடராஜன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ராதாபுரம் ஒன்றியம் சமூகரெங்கபுரத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு நெல்லை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவரும், திசையன்விளை முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவருமான ஏ.கே.சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவர் நாராயணபெருமாள், பணகுடி நகர பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜி.டி.லாரன்ஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தி.மு.க.
சமூகரெங்கபுரத்தில் தி.மு.க. சார்பில் ராதாபுரம் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மகாதேவன்குளம் ஊராட்சி செயலாளர் ஜபுருலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story