நத்தம் அருகே, மின்னல் தாக்கி 11 ஆடுகள் பலி


நத்தம் அருகே, மின்னல் தாக்கி 11 ஆடுகள் பலி
x
தினத்தந்தி 16 Sept 2019 3:15 AM IST (Updated: 16 Sept 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

நத்தம் அருகே மின்னல் தாக்கி 11 ஆடுகள் பலியாகின.

நத்தம், 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள லிங்கவாடியை சேர்ந்தவர்கள் பாப்பு (வயது 62). பாலு (55). இவர்கள் தங்களது வீடுகளில் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் இவர்கள் பெருமாள் மலைப்பகுதியில் மேய்ச்சலுக்கு 11 ஆடுகளை விட்டிருந்தனர்.

ஆனால் நீண்ட நேரமாகியும் ஆடுகள் திரும்பி வரவில்லை. இதனால் ஆடுகளை தேடி பாப்புவும், பாலுவும் சென்றனர். அப்போது மலைப்பகுதியில் ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

நேற்று முன்தினம் அப்பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் 11 ஆடுகளும் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கிராம நிர்வாக அலுவலர் முருகவேல் மற்றும் உதவியாளர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர்.

பின்னர் வருவாய்த்துறையினர், அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக் கப்படும் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story