ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 17 Sept 2019 4:15 AM IST (Updated: 17 Sept 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் உள்ள சுற்றுச்சூழல் துறை சார்பில் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி, வினாடி- வினா போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவை நடைபெற்றது.

தாமரைக்குளம்,

உலக ஓசோன் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஓசோன் மண்டலத்தை பாதுகாப்பதற்காக பல்வேறு நாடுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனையொட்டி அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் உள்ள சுற்றுச்சூழல் துறை சார்பில் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி, வினாடி- வினா போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவை நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுவழங்கப்பட்டது. இதற்கு கல்லூரி முதல்வர் மலர்விழி தலைமை தாங்கி பேசுகையில், சுற்றுச்சூழல் படிக்கும் மாணவர்களாகிய நீங்கள் முதலில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது எவ்வாறு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை தங்களது பெற்றோர்களிடமும், பொதுமக்களிடமும் எடுத்து கூறி சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று கூறினார். இதில் சுற்றுச்சூழல் தலைவர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஓசோன் தினத்தையொட்டி இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் மனித சங்கிலி நடைபெற்றது.

Next Story