நம்பியூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலி


நம்பியூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலி
x
தினத்தந்தி 17 Sept 2019 3:15 AM IST (Updated: 17 Sept 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

நம்பியூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு மாணவி இறந்தார்.

நம்பியூர்,

நம்பியூர் அருகே உள்ள ரங்கநாத நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகள் விகாசினி (14). இவர் அந்தியூரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல் காலையில் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு விகாசினி வந்து உள்ளார். அப்போது அவர் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டார்.

இதனால் விகாசினியை அவருடைய பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து உள்ளனர். சிகிச்சை முடிந்து சிறிது நேரத்தில் வீட்டுக்கு விகாசினி சென்றுவிட்டார். இரவில் அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது.

உடனே அவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் விகாசினி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மர்ம காய்ச்சலால் மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story