அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
தூத்துக்குடியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி,
அண்ணா 111-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனி பகுதியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தூத்துக்குடி மாநகர வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி ஆவின் தலைவர் என்.சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
அண்ணாவின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு, அண்ணாவின் பெயரை தாங்கி கட்சி நிறுவிய எம்.ஜி.ஆர், கட்சியை வழிநடத்திய ஜெயலலிதா அவர்களுக்கு பின்னர் கட்சியை கட்டு கோப்பாக நடத்தி வரும் தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் தலைமையிலான அ.தி.மு.க.விற்கு தான் தகுதி உள்ளது. வேறு எந்த கட்சிக்கும் தகுதி இல்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்பந்தமிட்டு முதலீடுகளை ஈர்த்து சாதனை படைத்துள்ளார். அனைவரிடமும் எளிமையான முதல்வர் என்ற பெயரை பெற்றுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story