தளவாய்புரம் அருகே என்ஜினீயர் விவசாயம் செய்ததை அவமானமாக கருதிய மனைவி தற்கொலை


தளவாய்புரம் அருகே என்ஜினீயர் விவசாயம் செய்ததை அவமானமாக கருதிய மனைவி தற்கொலை
x
தினத்தந்தி 17 Sept 2019 4:45 AM IST (Updated: 17 Sept 2019 2:25 AM IST)
t-max-icont-min-icon

என்ஜினீயர் விவசாயம் பார்த்ததை அவமானமாக கருதிய அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

தளவாய்புரம்,

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெரிய மாடசாமி. என் ஜினீயரான இவர் விவசாயம் செய்து வந்தார். இவரது மனைவி ஸ்டெல்லாமேரி (வயது25). இவரும் என்ஜினீயரிங் படித்துள்ளார். இருவருக்கும் 4 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் இருக்கிறான்.

என்ஜினீயரான கணவர் விவசாயம் பார்த்தது ஸ்டெல்லாமேரிக்கு பிடிக்கவில்லை. அதனை அவமானமாக கருதி, அரசாங்க வேலைக்கு செல்ல வற்புறுத்தியதால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இதே போல் சம்பவத்தன்று மாலையும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. குடும்பத்தினர் இருவரையும் சமாதானம் செய்தவுடன் பெரிய மாடசாமி வயல்காட்டிற்கு சென்று விட்டார். இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஸ்டெல்லாமேரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதுகுறித்து சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குபதிவு செய்தார். சாத்தூர் கோட்டாட்சியர் இதுகுறித்து விசாரணை நடத்துகிறார்.

Next Story