மேடையில் இருக்கை வழங்கப்படாததால்: பா.ஜனதா நிகழ்ச்சியில் இருந்து கணேஷ் நாயக் வெளியேறியதால் - பரபரப்பு
மேடையில் இருக்கை வழங்கப்படாத அதிருப்தியில் பா.ஜனதா நிகழ்ச்சியில் இருந்து கணேஷ் நாயக் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் தேசியவாத காங்கிரசில் இருந்து கட்சி தாவியவர் ஆவார்.
மும்பை,
நவிமும்பையில் தேசியவாத காங்கிரசின் சக்தி வாய்ந்த தலைவராக விளங்கியவர் கணேஷ் நாயக். காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசில் மந்திரியாகவும் இருந்தார். மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்த நிலையில், மராட்டிய சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு கணேஷ் நாயக் பா.ஜனதாவில் இணையும் முடிவை எடுத்தார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் பா.ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்ட நிகழ்ச்சி தானேயில் உள்ள கட்கரி அரங்கத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த கணேஷ் நாயக் மேடைக்கு அழைக்கப்படவில்லை. மாறாக அவருக்கு பார்வையாளர்கள் இடத்தில் முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இதனால் கணேஷ் நாயக் அதிருப்தி அடைந்தார். உடனடியாக அவர் நிகழ்ச்சி நடந்த அரங்கத்தில் இருந்து வெளியேறினார். இது அரங்கத்தில் பரபரப்பை உண்டாக்கியது.
இதுபற்றி மாநில தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் பாட்டீல் தனது டுவிட்டர் பக்கத்தில், மேடையில் கணேஷ் நாயக்கிற்கு இருக்கை வழங்கப்படாததை பார்த்து வேதனை அடைந்தேன். அவருக்கு உரிய மரியாதையை கொடுக்காததன் மூலம் பா.ஜனதா வேறுபாட்டுடன் நடந்து கொள்ளும் கட்சி என்பதை காட்டி உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

இதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் தனது மகன் சஞ்சீவ் நாயக்குடன் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார். ஏற்கனவே அவரது இளைய மகன் சந்திப் நாயக்கும் பா.ஜனதாவில் சேர்ந்தார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் பா.ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்ட நிகழ்ச்சி தானேயில் உள்ள கட்கரி அரங்கத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த கணேஷ் நாயக் மேடைக்கு அழைக்கப்படவில்லை. மாறாக அவருக்கு பார்வையாளர்கள் இடத்தில் முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இதனால் கணேஷ் நாயக் அதிருப்தி அடைந்தார். உடனடியாக அவர் நிகழ்ச்சி நடந்த அரங்கத்தில் இருந்து வெளியேறினார். இது அரங்கத்தில் பரபரப்பை உண்டாக்கியது.
இதுபற்றி மாநில தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் பாட்டீல் தனது டுவிட்டர் பக்கத்தில், மேடையில் கணேஷ் நாயக்கிற்கு இருக்கை வழங்கப்படாததை பார்த்து வேதனை அடைந்தேன். அவருக்கு உரிய மரியாதையை கொடுக்காததன் மூலம் பா.ஜனதா வேறுபாட்டுடன் நடந்து கொள்ளும் கட்சி என்பதை காட்டி உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story