பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்கிடுவோம் - கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள்


பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்கிடுவோம் - கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 16 Sep 2019 10:30 PM GMT (Updated: 16 Sep 2019 9:49 PM GMT)

பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்கிடுவோம் என கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி,

பிரதமர் நரேந்திரமோடி சுதந்திர தினத்தன்று பேசுகையில், பிளாஸ்டிக் இல்லா இயக்கம் சார்பில் 11.9.2019 முதல் 1.10.2019 வரை ஊரக மற்றும் நகர பகுதிகளில் விழிப்புணர்வை உருவாக்கவும், 2.10.2019-ம் தேதியன்று தேசிய அளவில் உடல் உழைப்பு செய்தல் மற்றும் உறுதிமொழி எடுத்திடவும், 3.10.2019 முதல் 27.10.2019 வரை நகர மற்றும் ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்பட்ட மறுசுழற்சி பொருட்கள், பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்துதல் போன்ற பணிகளை செய்திட வேண்டும்.

இந்த விழிப்புணர்வு இயக்கத்தில் அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களையும் முழுமையாக ஈடுபடுத்தி பொதுமக்களிடையே பிளாஸ்டிக் உபயோகப்படுத்துதல் தடை செய்யப்பட்டுள்ளது குறித்து எடுத்துரைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் உள்ள பொது இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் உபயோகத்தினை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், ஊர்வலங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்குதல், சுவர் விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை உருவாக்கிட அனைவரும் இணைந்து செயலாற்றிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story