அ.தி.மு.க. ஆட்சி நடைபெறும் தமிழகத்தில், இந்தி மொழியை திணிக்க முடியாது - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு


அ.தி.மு.க. ஆட்சி நடைபெறும் தமிழகத்தில், இந்தி மொழியை திணிக்க முடியாது - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு
x
தினத்தந்தி 18 Sept 2019 4:00 AM IST (Updated: 17 Sept 2019 7:08 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஆட்சி நடைபெறும் தமிழகத்தில், இந்தி மொழியை திணிக்க முடியாது என நாகையில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.

நாகப்பட்டினம்,

நாகை புதிய பஸ் நிலையம் அருகே அவுரித்திடலில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாகை நகர செயலாளர் தங்க.கதிரவன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. கலையரசன், முன்னாள் மாவட்ட பொருளாளர் பாட்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:& 
 மத்திய அரசு தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க முயற்சிக்கிறது எனவும், அதை தமிழக முதல்&அமைச்சர் வேடிக்கை பார்க்கிறார் எனக்கூறி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 
அரசியல் செய்கிறார். பெரியார் காட்டிய வழியில் அண்ணா இந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தை முன் எடுத்து சென்று வெற்றி பெற்றார். 
இந்தி மொழி திணிப்பு
அண்ணாவின் பெயரில் உள்ள கட்சியான அ.தி.மு.க. ஒரு போதும் இந்தி மொழி திணிப்பை ஏற்காது. முன்னாள் முதல்&அமைச்சர்கள் 
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வகுத்து தந்த பாதையில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெறும் தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். 
கூட்டத்தில் கட்சியின் 
நிர்வாகிகள் உள்பட பலர் 
கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட மாணவரணி செயலாளர் சுதாகர் நன்றி கூறினார்.

Next Story