சீர்காழியில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடுகள் பூட்டி 'சீல்' வைப்பு - அறநிலையத்துறை அதிகாரி நடவடிக்கை


சீர்காழியில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடுகள் பூட்டி சீல் வைப்பு - அறநிலையத்துறை  அதிகாரி நடவடிக்கை
x
தினத்தந்தி 17 Sep 2019 10:00 PM GMT (Updated: 17 Sep 2019 2:29 PM GMT)

சீர்காழியில், அறநிலையத்துறை அதிகாரி நடவடிக்கையின் பேரில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடுகள் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டன.

சீர்காழி,

சீர்காழியில், இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நாகேஸ்வரமுடையார் கோவில் உள்ளது. சீர்காழி புழுகாப்பேட்டை 
புதுத்தெருவில் நாகேஸ்வரமுடையார் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து 4 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என இந்துசமய அறநிலையத்துறையினர் பலமுறை தபால் அனுப்பினர். ஆனால், அங்கு வசிப்பவர்கள் இடத்தை காலி செய்யவில்லை. 

இதனை தொடர்ந்து நேற்று இந்துசமய அறநிலையத்துறையின் கும்பகோணம் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் செயல் அலுவலர் அன்பரசன், ஆய்வாளர் கண்ணதாசன் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 4 வீடுகள் பூட்டி Ôசீல்Õ வைக்கப்பட்டன.
மேலும், வீட்டிற்குள் செல்லாத வகையில், அந்த வீடுகளின் முன்பு கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைத்துள்ளனர். அங்கு கோவிலுக்கு சொந்தமான இடம் என்று பெயர் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இந்த பணியின்போது போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் மின்சாரத்துறையினர் இருந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story