மாவட்ட செய்திகள்

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை + "||" + To the statue of Periyar In honor of dressing up for the evening

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பெரம்பலூரில் தி.மு.க. மற்றும் திராவிடர் கழகம், பெரியாரிய இயக்கங்கள் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா ேநற்று கொண்டாடப்பட்டது.
பெரம்பலூர்,

பெரம்பலூரில் தி.மு.க. மற்றும் திராவிடர் கழகம், பெரியாரிய இயக்கங்கள் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா ேநற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அம்பேத்கர் சிலையில் இருந்துஏராளமாேனார் ஊர்வலமாக புறப்பட்டு பெரியார் சிலையை வந்தடைந்தனர் அடைந்தது. பின்பு பெரியார் சிலைக்கு தி.மு.க., திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பெரியாரிய இயக்கங்கள், தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ஓவியர் முகுந்தன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் தங்கராசு, செயலாளர் ஆதிசிவம், நகர தலைவர் அக்ரி ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் வீர.ஞானசேகரன், ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க பொறுப்பாளர் வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. கரூர் ரெயில் நிலைய வளாகத்தில் தூய்மை பணி காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்க நவீன எந்திரம்
காந்தி பிறந்ததினத்தையொட்டி கரூர் ரெயில் நிலைய வளாகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் வகையிலான நவீன எந்திரம் பயணிகளின் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கப்பட்டது.
2. காந்தி உருவப்படத்திற்கு அரசு தலைமை கொறடா மரியாதை கிராம சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார்
அரியலூரில் காந்தி பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அவர் கல்லங்குறிச்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
3. பிறந்த நாளையொட்டி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பிறந்த நாளையொட்டி பெரம்பலூரில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
4. பிறந்தநாளையொட்டி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை
திண்டுக்கல், நிலக்கோட்டையில் பெரியார் பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
5. பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆசிரியரின் தேர்வுகள்...