காஞ்சீபுரம் மாவட்டம்-விழிப்புணர்வு கூட்டம்


காஞ்சீபுரம் மாவட்டம்-விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 18 Sept 2019 3:30 AM IST (Updated: 18 Sept 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம், ஊராட்சி செயலாளர்கள், மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் துாய்மையே சேவை இயக்கம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், இந்த திட்டத்தை அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பாக செயல்படுத்திடவும் ஊராட்சி செயலாளர்கள், மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்தை மேம்படுத்துதல், கழிப்பறை பயன்பாட்டின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் சித்தாமூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் வரவேற்புரை வழங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கல்யாணி, மாலதி ஆகியோர் தலைமை தாங்கினர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமுத்து முன்னிலை வகித்தார். இதில் புவி வெப்பமயமாதலை தடுப்பது குறித்து விளக்கப்பட்டது. தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. விழிப்புணர்வு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி நன்றி கூறினார்.

Next Story