தொழில் அதிபரின் மகன், கார் டிரைவரை கடத்தினர்: கடத்தல்காரர்கள் 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்
பெங்களூரு அருகே கடத்தப்பட்ட தொழில்அதிபரின் மகன்-கார் டிரைவர் ஆகியோரை 22 நாட்களுக்கு பிறகு போலீசார் நேற்று மீட்டனர். இந்த வேளையில் தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 3 கடத்தல்காரர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
பெங்களூரு,
சினிமா பாணியில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெங்களூரு எலகங்கா உபநகர் மாத்ரு படாவனேயில் வசித்து வருபவர் சித்தராஜூ. தொழில்அதிபர். இவருடைய மகன் ஹேமந்த் (வயது 17). இவர் சிங்கநாயகனஹள்ளியில் உள்ள தனியார் பி.யூ. கல்லூரியில் படித்து வருகிறார். இவரை தினமும் காரில் கேசவ் ரெட்டி என்பவர் வீட்டில் இருந்து கல்லூரிக்கும், கல்லூரியில் இருந்து வீட்டுக்கும் அழைத்து வருவதை வாடிக்கையாக வைத்து இருந்தார்.
கடந்த மாதம் 26-ந் தேதி இரவு நேரம் ஆனபோதிலும் கல்லூரியில் இருந்து ஹேமந்தை அழைத்து கொண்டு கேசவ் ரெட்டி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சித்தராஜூ, கேசவ் ரெட்டியின் செல்போனை தொடர்பு கொள்ள முயன்றார். அப்போது அவருடைய செல்போன் ‘சுவிட்ச்ஆப்‘ செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து தனது மகன் ஹேமந்த், கார் டிரைவர் கேசவ் ரெட்டி ஆகியோரை மர்மநபர்கள் கடத்தி சென்றதாக ராஜனகுண்டே போலீசில் சித்தராஜூ புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டு கடத்தல்காரர்களை தேட தொடங்கினர்.
இதற்கிடையே, கடத்தலில் ஈடுபட்ட மர்மநபர்கள் சித்தராஜூவுக்கு போன் செய்து பேசினர். அப்போது, ‘ரூ.3 கோடி கொடுத்தால் ஹேமந்த், கேசவ் ரெட்டி ஆகியோரை விட்டு விடுகிறோம். இல்லாவிட்டால் கொலை செய்து விடுவோம்‘ என்று மிரட்டினர். இதனால், கடத்தல்காரர்களை கைது செய்து, 2 பேரையும் பத்திரமாக மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கடத்தல்காரர்களை கைது செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
இருப்பினும் கடத்தல்காரர்கள் பற்றிய எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சித்தராஜூவை தொடர்பு கொண்ட மர்மநபர்கள் ரூ.1.80 கோடி கொடுத்தால் ஹேமந்த், கேசவ் ரெட்டி ஆகியோரை விடுவதாக கூறினர். இதற்கு சித்தராஜூ ஒப்புக்கொண்டார்.
அதன்படி நேற்று அதிகாலையில் கனகபுரா ரோட்டில் உள்ள நைஸ்ரோடு சந்திப்பில் வைத்து சித்தராஜூ கடத்தல்காரர்களை சந்தித்து பணம் கொடுக்க சென்றார். அவருடன் சாதாரண உடையில் போலீசாரும் சென்றனர். 2 மணிநேர காத்திருப்புக்கு பிறகு நவீன் (வயது 24) என்பவர் அங்கு வந்து பணத்தை பெற முயன்றார்.
அப்போது ஆனேக்கல் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஹேமந்த் குமார், அவரை பிடிக்க முயன்றார். இந்த வேளையில் கோபம் அடைந்த நவீன் கத்தியை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஹேமந்த் குமாரை குத்திவிட்டு ஓடினார். சுதாரித்து கொண்ட ஹேமந்த் குமார் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து நவீனின் காலில் சுட்டார். இதனால் அவர் சுருண்டு விழுந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
இந்த விசாரணையின்போது மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட ஜனபிரியா டவுன்ஷிப்பில் உள்ள தைலமரத்தோப்பில் கடத்தல்காரர்கள் பதுக்கி இருப்பது தெரியவந்தது. அதாவது அங்கு காரில் ஹேமந்த், கேசவ் ரெட்டி ஆகியோரை பிரசாந்த் (25), தங்கபாலா (25) என்பவர்கள் சிறை வைத்து நவீனுக்காக காத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு மாதநாயக்கனஹள்ளி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சத்தியநாராயணா, தொட்டபள்ளாப்புரா சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராகவேந்திரா, ராஜனகுண்டே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதர் ஆகியோர் தலைமையிலான போலீசார் சென்றனர். போலீசாரை பார்த்தவுடன் அங்கு இருந்த 2 பேரும் ஹேமந்த், கேசவ் ரெட்டி ஆகியோரின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்வதாக மிரட்டினர்.
இந்த சந்தர்ப்பத்தில் அவர்களை காப்பாற்ற போலீஸ்காரர் மதுகுமார் சென்றார். அப்போது பிரசாந்த் அவரை கத்தியால் குத்தினார். அப்போது பாதுகாப்பு கருதி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சத்யநாராயணா, பிரசாந்தின் காலில் துப்பாக்கியால் சுட்டார். இதனால் அவர் சுருண்டு விழுந்தார். இதன் தொடர்ச்சியாக சப்-இன்ஸ்பெக்டர் முரளிதர், ஹேமந்த், கேசவ் ரெட்டி ஆகியோரை மீட்க முயன்றார்.
அப்போது தங்கபாலா, சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரை கத்தியால் குத்தினார். உடனடியாக சுதாரித்து கொண்ட முரளிதர், தங்கபாலாவின் ஒரு காலில் துப்பாக்கியால் சுட்டார். அதேநேரத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராகவேந்திராவும் தங்கபாலாவின் இன்னொரு காலில் துப்பாக்கியால் சுட்டார். 2 கால்களிலும் குண்டு பாய்ந்ததால் அவரும் சரிந்து விழுந்தார். இதையடுத்து பிரசாந்த், தங்கபாலா ஆகியோரையும் பிடித்து போலீசார் கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து தொழில்அதிபர் சித்தராஜூவின் மகன் ஹேமந்த், கார் டிரைவர் கேசவ் ரெட்டி ஆகியோரை போலீசார் பத்திரமாக மீட்டனர். இவர்கள் 2 பேரையும் போலீசார் 22 நாட்களுக்கு பிறகு மீட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் துப்பாக்கிசூட்டில் காயம் அடைந்த நவீன், பிரசாந்த், தங்கபாலா ஆகியோரையும், கடத்தல்காரர்களால் கத்திக்குத்து காயம் அடைந்த போலீஸ்காரர் மற்றும் போலீஸ் அதிகாரிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கைதான பிரசாந்த், நவீன் ஆகியோர் பெங்களூரு உல்லாலை சேர்ந்தவர்கள் என்பதும், தங்கபாலா தமிழ்நாடு விழுப்புரத்தில் உள்ள திருகோவிலூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் பணத்துக்காக கடத்தலில் ஈடுபட்டதும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க அவர்கள் ஹேமந்த், கேசவ் ரெட்டி ஆகியோரை காரில் வைத்து கொண்டு பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்ததும் தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடிவருகிறார்கள். சினிமா பாணியில் நடந்த சம்பவம் நேற்று பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story