ஆவின் பால்பொருட்களின் புதிய விலை விவரம் அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது


ஆவின் பால்பொருட்களின் புதிய விலை விவரம் அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது
x
தினத்தந்தி 18 Sept 2019 4:15 AM IST (Updated: 18 Sept 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

குமரி ஆவின் பால்பொருட்களின் புதிய விலை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. விலை விவரம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய (ஆவின்) தலைவர் எஸ்.ஏ.அசோகன், பொதுமேலாளர் டி.ஆர்.தியானேஷ்பாபு ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் உள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தின் உத்தரவுக்கு ஏற்ப 18-9-2019 (இன்று) முதல் ஆவின் குமரி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துவரும் பால் பொருட்களுக்கான விற்பனை விலை உயர்வு செய்யப்படுகிறது. புதிய பால்பேடா கவர் அச்சிட்டு வரும் வரை பழைய விலை அச்சிட்ட பால்பேடா கவரிலேயே புதிய விலை அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

புதிய விலை விவரம்

புதிய விலை விவரம் வருமாறு:-

சூடான பால் (120 மில்லி)- ரூ.11, சூடான பாதாம் பால் (120 மில்லி)- ரூ.15, பால்கோவா (50 கிராம்)- ரூ.22, பால்கோவா (250 கிராம்)- ரூ.110, நறுமணப்பால் பால் பாக்கெட் (200 மில்லி)- ரூ.25, மில்க் ஷேக் பாக்கெட் (200 மில்லி)- ரூ.25, 200 மில்லி நெய் ஜார்- ரூ.110, 500 மில்லி நெய் ஜார்- ரூ.255, 1 லிட்டர் நெய் ஜார்- ரூ.495, 5 லிட்டர் நெய் ஜார்- ரூ.2,450, 15 கிலோ நெய் டின்- ரூ.8,075, 170 கிராம் தயிர்- ரூ.10, 500 கிராம் தயிர்- ரூ.27, சமையல் வெண்ணெய் (500 கிராம்)- ரூ.240, சிறிது உப்பு சேர்த்த வெண்ணெய் (100 கிராம்)- ரூ.50, கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் (1 கிலோ)- ரூ.320, கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் (500 கிராம்)- ரூ.160, பனீர் (200 கிராம்)- ரூ.85, நெய் மைசூர்பா (250 கிராம்)- ரூ.120.

வாடிக்கையாளர்கள் இதுவரை எங்கள் நிறுவனத்துக்கு அளித்து வரும் பேராதரவிற்கு நன்றி தெரிவிப்பதுடன், தொடர்ந்து ஆதரவு நல்கிட கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story