பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி,
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் பா.ஜ.க. மாவட்ட செயலாளர் நாராயணன் தலைமையில், கட்சி கொடியேற்றினர். பின்னர் சாலையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து மந்திதோப்பு சிறுவர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினர்.
நகர பொதுச்செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், தினேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பா.ஜ.க. ஒன்றிய தலைவர் ராம்கி தலைமையில், நோயாளிகளுக்கு பழம், பிஸ்கட் வழங்கினர். நகர தலைவர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பா.ஜ.க.வினர் ரத்த தானம் வழங்கினர். பின்னர் திருச்செந்தூர் அன்பு இல்லத்தில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. முன்னதாக திருச்செந்தூர் ரெயிலடி ஆனந்த விநாயகர் கோவிலில் பா.ஜ.க.வினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
மாநில வர்த்தக அணி தலைவர் ராஜகண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story