திருமருகலில், ஆற்றில் மூழ்கி முதியவர் சாவு - போலீசார் விசாரணை


திருமருகலில், ஆற்றில் மூழ்கி முதியவர் சாவு - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 Sept 2019 3:30 AM IST (Updated: 18 Sept 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

திருமருகலில் ஆற்றில் மூழ்கி முதியவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமருகல், 

திருமருகல் முடிகொண்டான் ஆற்றில் நேற்று, 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமருகல் தீயணைப்பு நிலைய அதிகாரி திலீப் குமார் தலைமையில், தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்த முதியவர், திருமருகல் அருகே ஆதினகுடி மதகடி தெருவை சேர்ந்த நாராயணன் (வயது 80) என்பதும், கூலித்தொழிலாளியான இவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக வெளியூர் சென்று விட்டு நேற்று முன் தினம் மாலை வீட்டுக்கு வந்த போது முடிகொண்டான் ஆற்றில் குளிப்பதற்காக இறங்கிய போது கால் தவறி ஆற்றில் விழுந்து மூழ்கியதும் தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story