பழனியில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பழனியில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Sept 2019 4:00 AM IST (Updated: 18 Sept 2019 3:07 AM IST)
t-max-icont-min-icon

பழனி ரெயில் நிலையத்தில், சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பழனி,

பழனி ரெயில் நிலையத்தில், சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிளை தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் ரபீக், கிளை செயலாளர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரெயில்வேதுறை மற்றும் ரெயில்வே மருத்துவமனையை தனியார் மயமாக்குதலை கைவிட வேண்டும். மத்திய அரசு உற்பத்தி தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ரெயில்வே ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story