பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு


பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 18 Sept 2019 3:30 AM IST (Updated: 18 Sept 2019 3:37 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

காரைக்குடி,

பெரியார் பிறந்த தினத்தையொட்டி காரைக்குடியில் உள்ள அவரது உருவசிலைக்கு தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஆர். பெரியகருப்பன் எம்.எல்.ஏ., தென்னவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அசோகன், முன்னாள் நகர் மன்ற தலைவர் முத்துத்துரை, பெரு நகர செயலாளர் குணசேகரன், சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பள்ளத்தூர் ரவி, கோட்டையூர் ஆனந்தன், மேற்கு ஒன்றிய செயலாளர், சுப.சின்னத்துரை, தொழிற்சங்க நிர்வாகி குள.வைரவன், காரைக்குடி நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சக்தி வாசு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திராவிடர் கழகத்தின் சார்பில் மாநில மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்னா ரெஸ், மாவட்ட தலைவர் அரங்கசாமி, மாவட்ட செயலாளர் வைகறை, தலைமை கழக பேச்சாளர் பிராட்லா, நகரச் செயலாளர் கலைமணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைச் செயலாளர் ராமச்சந்திரன், மாநில குழு உறுப்பினர் சிவாஜி காந்தி, நகர செயலாளர் சீனிவாசன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட குழு உறுப்பினர்கள் பத்மநாபன், கருப்புசாமி, தட்சிணாமூர்த்தி, பாக்கியராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார், மாநில துணைச் செயலாளர்கள் இளைய கவுதமன், பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் காக்கூர் தமிழேந்தி, தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகர தலைவர் பாண்டி, மெய்யப்பன், நகர பொருளாளர் முகமது கனி, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஜெயப்பிரகாஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் ஆதித்தமிழர் பேரவை, பச்சைத் தமிழகம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இளையான்குடி மேற்கு ஒன்றிய பேரூர் தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்த நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சுப.மதியரசன், பேரூர் செயலர் நஜீமுதின், மாவட்ட பிரதிநிதி யாசின், ஒன்றிய துணைச் செயலர் மலைமேகு, பேரூர் இளைஞரணி பைரோஸ்கான், ஊராட்சி செயலர்கள் மலைச்சாமி, பழனிவேல், பல்த்தசார், இப்ராகிம், சரவணன், சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story