ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி - கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்
ஊட்டச்சத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை கலெக்டர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்,
பொதுமக்கள் அதிக அளவில் கூடும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மக்களுக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஊட்டச்சத்து கண்காட்சி மற்றும் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமலினி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சியில் கருத்தரிப்பு முதல் குழந்தையின் 2 வயது வரையிலான நாட்களின் முக்கியத்துவம், வயிற்றுப்போக்கை தடுக்கும் முறைகள், ஊட்டச்சத்து உணவின் முக்கியத்துவம், ரத்தசோகையை தடுக்கும் வழிகள், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை விளக்கும் வண்ணம் அமைந்திருந்தது.
மிகவும் பயனுள்ள வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊட்டச்சத்தின் அவசியம் குறித்த கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர். அங்கன்வாடி பணியாளர்களின் மூலம் உரிய விளக்கமும் அளிக்கப்பட்டது.
கர்ப்பிணிகள், பிரசவித்த தாய்மார்கள், வளர் இளம்பெண்கள், குழந்தைகள் மற்றும் அனைவருக்கும் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரோக்கியமான மக்களால் ஆனதே வலிமையான தேசமாகும். எனவே ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்காக ஊட்டச்சத்து நிறைந்த சத்தான உணவு வகைகளை உட்கொள்வதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தேசிய ஊட்டச்சத்து மாதம் கடை பிடிக்கப்பட்டு வருவதன் முக்கிய நோக்கமாகும்.
பொதுமக்கள் அதிக அளவில் கூடும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மக்களுக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஊட்டச்சத்து கண்காட்சி மற்றும் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமலினி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சியில் கருத்தரிப்பு முதல் குழந்தையின் 2 வயது வரையிலான நாட்களின் முக்கியத்துவம், வயிற்றுப்போக்கை தடுக்கும் முறைகள், ஊட்டச்சத்து உணவின் முக்கியத்துவம், ரத்தசோகையை தடுக்கும் வழிகள், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை விளக்கும் வண்ணம் அமைந்திருந்தது.
மிகவும் பயனுள்ள வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊட்டச்சத்தின் அவசியம் குறித்த கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர். அங்கன்வாடி பணியாளர்களின் மூலம் உரிய விளக்கமும் அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story