மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை


மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 19 Sept 2019 4:15 AM IST (Updated: 18 Sept 2019 11:14 PM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராதரூ.3.32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் நேற்று காலை 10மணியளவில்வழக்கம்போல் சுறுசுறுப்புடன் செயல்பட தொடங்கியது.பத்திரப்பதிவுசெய்வதற்காக காலை முதலே பொதுமக்கள் அலுவலகத்திற்கு வரத்தொடங்கினர். இதனால் அங்கு பொதுமக்கள் கூட்டம்அதிகமாக காணப்பட்டது.இந்தநிலையில்மதியம் 12மணியளவில்மேட்டுப்பாளையம்பத்திரப்பதிவுஅலுவலகத்தில் லஞ்சஒழிப்புத்துறைபோலீசார் மற்றும்பத்திரப்பதிவுஆய்வுத்துறையினர் இணைந்து அதிரடியாக சோதனையில்ஈடுபட்டனர்.பத்திரப்பதிவுபணிக்காக ஏராளமான பொதுமக்கள் காத்திருந்த நிலையில் திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்த லஞ்சஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டுராஜேஷ் தலைமையில் 3 பெண் ஆய்வாளர்கள் உள்பட 10-க்கும்மேற்பட்ட அதிகாரிகள் குழுவினர் தங்களதுசோதனையை தொடங்கினர்.

அப்போதுஅலுவலக கதவைமூடிவிட்டு அங்கு யாரேனும் இடைத்தரகர்கள் உள்ளனரா என விசாரணை நடத்தினர்.இதன்பின்னர்பத்திரப்பதிவுபணிக்காக வந்திருந்த பொதுமக்களை தவிர அலுவலகத்தில்இடைத்தரகர்களாக செயல்பட்டநபர்கள் மற்றும் அங்கிருந்த அலுவலர்களிடமும் சோதனையிட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது முதல் கட்டமாக கணக்கில்வராத ரூ.3.32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.இதன்பின்னர்அதிகாரிகள் மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அருணாவிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும்பத்திரப்பதிவுஆய்வு குழுவினர்ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்தனர். இந்தசோதனைஇரவு 10 மணி வரை நடைபெற்றது.

இதுகுறித்து லஞ்சஒழிப்பு போலீசார்மற்றும்பத்திரப்பதிவு ஆய்வுத்துறையினர் கூறுகையில், மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுவருவதாக கிடைத்தரகசிய தகவலின்பேரில்இந்த சோதனை நடைபெற்றது. முழுமையான ஆய்விற்கு பின்னரேஇந்த சோதனைகுறித்த முழு விவரங்கள் தெரிவிக்கப்படும். இதுசம்பந்தமாக 2 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர். இந்தஅதிரடி சோதனையால்பத்திரப்பதிவுஅலுவலகம்பரபரப்பாக காணப்பட்டது.

Next Story