போலீஸ்காரரின் மகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை வாலிபருக்கு சரமாரி அடி, உதை


போலீஸ்காரரின் மகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை வாலிபருக்கு சரமாரி அடி, உதை
x
தினத்தந்தி 19 Sept 2019 3:45 AM IST (Updated: 19 Sept 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ்காரரின் மகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்த வாலிபருக்கு அடி, உதை விழுந்தது.

மும்பை,

மும்பை போரிவிலியை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவரின் மகள் சட்டப்படிப்பு படித்து வருகிறார். அந்த பெண்ணுக்கு கடந்த ஒரு மாதமாக ஒரு செல்போன் எண்ணில் இருந்து அடிக்கடி ஆபாச குறுந்தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. அந்த ஆபாச குறுந்தகவல்களை அனுப்பிய ஆசாமி இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசியும் தொல்லை கொடுத்து வந்தார்.

இதனால் எரிச்சல் அடைந்த இளம்பெண் இதுபற்றி தனது அக்காளிடம் கூறினார்.

இந்தநிலையில், அந்த வாலிபர் இளம்பெண்ணுக்கு மீண்டும் போன் செய்தார். அப்போது அவரிடம் காந்திவிலி மேற்கு மகாவீர் நகர் அருகில் உள்ள பூங்காவுக்கு வரும்படி இளம்பெண் அழைத்தார். அதன்படி சம்பவத்தன்று அந்த வாலிபர் அங்கு வந்தார். இளம்பெண் தனது அக்காளுடன் சென்று அந்த வாலிபரை சந்தித்தார். இதில், இருவரும் சேர்ந்து வாலிபரை கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் அக்காள், தங்கை இருவரையும் திட்டினார்.

சரமாரி தாக்குதல்

இதை கவனித்த அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கினார்கள். மேலும் சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த வாலிபரை பிடித்தனர். கும்பல் தாக்குதலில் படுகாயம் அடைந்ததால் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணையில் அவரது பெயர் நிதின் பன்சால் (வயது24) என்பது தெரியவந்தது. இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை தாக்கியவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story