சட்டசபை தேர்தலில் இந்திய குடியரசு கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தல்
சட்டசபை தேர்தலில் இந்திய குடியரசு கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என பா.ஜனதா-சிவசேனா கூட்டணியிடம் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தி உள்ளார்.
மும்பை,
மராட்டிய சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் பா.ஜனதா-சிவசேனா கூட்டணியில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசு கட்சியும் அங்கம் வகித்து வருகிறது.
இந்தநிலையில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தலில் இந்திய குடியரசு கட்சி பா.ஜனதா சின்னத்தில் போட்டியிடாது. தனது சொந்த சின்னத்தில் போட்டியிடும். சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி தங்கள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மும்பையில்...
மேலும் அந்த கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில், மும்பையில் செம்பூர், மான்கூர்டு, புனேயில் புனே கண்டோன்மெண்ட், பிம்பிரி ஆகிய தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2014 சட்டமன்ற தேர்தலில் இந்திய குடியரசு கட்சி அம்பர்நாத், செம்பூர், பிம்ப்ரி, டெக்லூர், மெகர், விக்ரோலி, சிவாஜிநகர், தியோலாலி ஆகிய 7 தொகுகளில் போட்டியிட்டது. ஆனால் அனைத்து தொகுதிகளிலும் அதன் வேட்பாளர்கள் தோல்வியை தழுவினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story